Header Ads

  • சற்று முன்

    பிறந்த பத்து நாள் குழந்தையை அறிமுகம் செய்த பாடகி ஷ்ரேயா கோஷல்...


    பிரபல
    பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடி வருகிறார். நான்கு தேசிய விருதுகளையும் பல்வேறு மாநில அரசு விருதுகளையும் வென்றுள்ள ஸ்ரேஷா கோஷலின் இனிமையானக் குரலுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் ஷைலாதித்யா முகோபாத்யா என்பவரை , கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து கடந்த மார்ச் 4 ஆம் தேதி, தான் தாய்மை அடைந்திருப்பதாக சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

    இதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் மே மாதம் 22 ஆம் தேதி ஷ்ரேயா கோஷலுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இத்தகைய சூழலில், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அவர் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad