Header Ads

  • சற்று முன்

    ”பெண்களுக்கு முக்கியம் கல்விதான்” பெற்றோர்களே வரதட்சனை கொடுத்தாலும் அதனை பெண்கள் வாங்கக்கூடாது...


    கேரளாவை சேர்ந்தவர் விஸ்மயாவிற்கும் கிரண் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் பெற்றோர்களால் திருமணம் செய்து வைத்தன. ஆயுர்வேத மருத்துவரான விஸ்மயாவை கணவர் கிரண் கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார். திருமணத்தின்போது விஸ்மயாவின் பெற்றோர் அளித்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கார் பிடிக்கவில்லை என்று பிரச்சனை செய்து வந்திருக்கிறார் கிரண்.
     கார் விவகாரம் தொடர்பாக விஸ்மயாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். 

    இந்நிலையில் விஸ்மயா கடந்த 21ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். 24 வயதே ஆன விஸ்மயா வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

    வரதட்சணைக் கொடுமைக்கு ஆளான இவர் ஜூன் 21ஆம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு, வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட கார் பிடிக்காத காரணத்தால் தனது கணவர் தன்னைக் கண்மூடித்தனமாகத் தாக்கி, தனக்குக் காயம் ஏற்படுத்திய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். விஸ்மயாவின் கணவர் கிரணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.


    தற்போது கேரள காவல்துறை சட்டம் ஒழுங்கு ஐஜி ஹர்ஷிதா அட்டலூரியும் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அவர், "வரதட்சணைக் கேட்பது குற்றம். பெண்கள் இதில் ஒரு நிலையான கொள்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோரே முன்வந்து வரதட்சணையாக நகையும், பொருளும், பணமும் கொடுத்தாலும் கூட அதனை அவர்கள் ஏற்கக்கூடாது. பெண்களுக்கு கல்விதான் முக்கியம். பரிசுப்பொருட்கள் அல்ல.

    அதேபோல், திருமண உறவுக்குள் சென்ற பின்னர் பிரச்சினைகள் ஏற்படும்போது பெண்கள் உதவி கேட்கத் தயங்குகின்றனர். குடும்ப வன்முறையை சகித்துக் கொள்ளும் 90% பெண்கள் வழக்குப்பதிவு செய்ய விரும்புவதில்லை. மாறாக தங்களைத் துன்புறுத்தும் கணவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ காவல்துறையால் எச்சரிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகின்றனர்.


    இங்குதான் இளம் பெண்கள் தவறு செய்கின்றனர். எப்போது நீங்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகிறோர்களோ அல்லது மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறீர்களோ அப்போதே எல்லை மீறப்பட்டுவிட்டது என்றே அர்த்தம். நீங்கள் முதலில் உங்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களின் உடலை மதியுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad