Header Ads

  • சற்று முன்

    அழகிய வண்ணமிகு பாம்பு...இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ...



    பாம்பு என்பது ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம் ஆகும். இது முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்டது. எனினும் தன் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரக்கூடியது. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை. பாம்புகளில் தோராயமாக 3,600 இனங்கள் உள்ளன. 
    பொதுவாக பாம்பு என்றாலே  படையே நடுங்கும் . அதற்கு காரணம் பாம்பின் விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற பயமும்தான். ஆனால் அதே பாம்பை வெளிநாடுகளில் சிலர் தங்கள் வீடுகளில் வளர்த்து வருகின்றன.

    ஆனால் ஒருவர் வளர்த்துவரும் பாம்பு ஒன்று பல வண்ணங்களில் மிளிரும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. jayprehistoricpets என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் இந்த காட்சி இடம் பெற்றுள்ளது. அதில், பெரிய மலைப்பாம்பு ஒன்று பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பாம்பு வானவில் போன்ற தோற்றத்துடன் பார்க்கவே பல வண்ணங்களில் மிகவும் அழகாக உள்ளது. வைரலாகி வரும் அந்த வண்ணமிகு பாம்பின் வீடியோ.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad