Header Ads

  • சற்று முன்

    கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்தால் சிறை தண்டனை - பிலிப்பைன்ஸ் நாடு


    கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் பல நாடுகளை புரட்டி போட்டு கொண்டிருக்கிறது . இந்தியா உள்பட ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் இன்னும் பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தவண்ணமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பவர்களுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில்  சிறை தண்டனை வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ துதர்தே எச்சரித்துள்ளார்.சர்ச்சைக்கு பெயர்பெற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியபோது பிற நாடுகளை போல ஊரடங்கு பிறப்பித்தார். ஆனால் அப்போது நாட்டில் தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை சுடுவதற்கு போலீசார் மற்றும் ராணுவத்திற்கு அனுமதி அளித்து, மக்களை பீதியில் ஆழ்த்தினார். இந்நிலையில் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை உருவாகி வரும் நிலையில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.


    இந்நிலையில், சுமார் 11 கோடி மக்கள்தொகை கொண்ட அந்த நாட்டில் இதுவரை வெறும் 21 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் ரோட்ரிகோ துதர்தே நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. மேலும் கொரோனாவை வெல்ல தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் மக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பவர்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறிய அவர், தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்றும் கூறினார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad