Header Ads

  • சற்று முன்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியோட பரிசு தொகை எவ்வளவு தெரியுமா..?


    கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்துவருகின்றன.தற்போது சென்னையில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்றுள்ளதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்தியாவுக்கு வாய்ப்பு  உள்ளது. இரண்டாவது டெஸ்ட் முடிவுவரை இந்திய அணி 69.7 புள்ளிகள் பெற்றுள்ளது. இதில் இறுதி ஆட்டத்திற்கு இந்திய- நியூநிலாந்து அணிகள் தகுதிபெற்றுள்ளன. 

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு - மைக்கேல் காவ், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாகவும் தொலைக்காட்சி நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பாரோவும் பணியாற்றவுள்ளார்கள். கிறிஸ் பிராட், போட்டியின் நடுவராகப் பணியாற்றுவார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வெல்லும் அணிக்கு ரூ. 11.72 கோடி (1.6 மில்லியன் டாலர்) பரிசுத்தொகையாக வழங்கப்படும் என ஐசிசி இன்று தெரிவித்துள்ளது. இறுதி ஆட்டத்தில் தோற்கும் அணிக்கு ரூ. 5.86 கோடி (800,000 டாலர்) கிடைக்கும். இறுதி ஆட்டம் டிராவில் முடிவடைந்தால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad