Header Ads

  • சற்று முன்

    ஓடிடியில் ரிலீஸ் - சிவகார்த்திகேயனின் “டாக்டர்” படம்..


    தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவான சிவகார்த்திகேயன், நம்ம வீட்டு பிள்ளை, கனா, ரஜினிமுருகன், எதிர்நீச்சல், காக்கி சட்டை என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அடுத்த திரைப்படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயனும் பிரியங்கா அருள்மோகனும் இணைந்து நடித்துள்ளன. இந்த படத்தை  கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். விஜய்யின் அடுத்த திரைப்படமான ‘பீஸ்ட்’ திரைப்படத்தையும் நெல்சன் இயக்கியிருப்பதால் டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

    இந்நிலையில், டாக்டர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து கடந்த மார்ச் மாதமே படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. அப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டதால், ரம்ஜான் பண்டிகை தினத்தன்று படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்தது. 


    அப்போது லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டதால் டாக்டர் படம் ரிலீஸ் ஆகவில்லை.ஆனால் 

    கொரோனா பாதிப்பு தற்போது குறைந்திருந்தாலும் மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் திரையரங்குகள் திறப்பதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், டாக்டர் படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக படத்தை வெளியிட உள்ளதாகவும் படக்குழுவிடமிருந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad