Header Ads

  • சற்று முன்

    தொடர்ந்து சரிந்து வரும் தங்கம்...தங்கத்தின் விலை நிலவரம்...


    நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன. 


    இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பொதுமுடக்கக் காலத்தின் போது தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. அச்சமயம் தொழில்துறையில் நிலவிய தேக்கம் தங்கம் விலை உயர்வுக்கு வித்திட்டது. பின்னர், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு தங்கம் விலை கணிசமாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் தொழில்துறையில் தேக்கம் நிலவுகிறது. இதனால், தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்திக்கிறது.

    இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.62 குறைந்து ரூ.4,515க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.496 குறைந்து ரூ.36,120க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.75,100க்கும் விற்பனையாகிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad