Header Ads

  • சற்று முன்

    பிரபல ஓவியர் இளையராஜா கொரோனாவால் பலி....


    கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (43). 'ஆனந்த விகடன்' இதழில் 2010 முதல் வெளிவரத் தொடங்கிய இவரது ஓவியங்கள் உலகம் முழுக்க புகழ்பெற்றன. பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றவர்ஓவியத்தின் மீது தீராத காதல் கொண்ட இளையராஜா அதில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு திறமையை மேம்படுத்தினார்.

    தமிழக, கிராமப்புற பெண்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டும் அளவுக்கு தத்ரூபமாக ஓவியங்களை வரைய கூடிய திறமை பெற்றவர் இளையராஜா. மண்பானையில் சமையல் செய்யும் பெண், கோவில் குளத்தில் கால் நனைக்கும் பெண், பூ கட்டும் பெண் என இவர் வரைந்துள்ள ஓவியங்களைப் பார்க்கும் போது அது புகைப்படமா அல்லது ஓவியமா என்று பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும் அளவுக்கு மிக மிக தத்ரூபமாக இருக்கக்கூடியவை. 


    இந்நிலையில், கடந்த வாரம் அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணம் சென்றுள்ளார். ஆனால் சென்னை திரும்பிய அவருக்கு சளி மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சினை அதிகரித்துள்ளது. பின்னர் அவர் குடும்பத்தில் பலருக்கும் கொரோனா தொற்றுப்பரவ ஆரம்பிக்க சில நாட்களுக்கு முன்னர் மூச்சடைப்பின் காரணமாக எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தொற்று நுரையீரல் முழுக்கப் பரவிய நிலையில் மருத்துவமனைக்கு வந்ததால், நேற்று நள்ளிரவில் மாரடைப்பால்  மரணம் அடைந்தார்.

    கொரோனாவால் இன்னொரு தலைசிறந்த கலைஞனைப் பறிகொடுத்திருக்கிறோம் என பலரும் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad