Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு...


    தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாகவும்,காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பான வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், 


    காற்றின் திசை மாறுபாடும் வெப்பச்சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்றும் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என்றும் ஏனைய வட மாவட்டங்கள் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை மிதமான மழை பெய்யும் என்றும், ஜூன் 29 மற்றும் 30 உள் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்றும், ஜூலை 1ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad