Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு பெய்யும் - வானிலை ஆய்வு மையம்


    தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தருமபுரி, சிவகங்கை, விருதுநகரில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    மேலும் நாளை  தேனி, திண்டுக்கல், தருமபுரி,சேலம், சிவகங்கை, விருதுநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். மாலை நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad