Header Ads

  • சற்று முன்

    இந்தியா- நியூசிலாந்து இடையேயான முதல் நாள் டெஸ்ட் போட்டி ரத்து..


    கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்துவருகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் ஜூன் 18 இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு அணி வீரர்களும்  தயாராக இருந்தனர்.

    இந்நிலையில், முதல் முறையாக ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் இதை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், இன்று காலை முதலே அங்கு மழை பெய்து வருவதால், போட்டி தொடங்குவதில் தாமதமானது. போட்டிக்கான டாஸ் இன்னும் போடப்படாத நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால், முதல் பாதி ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மழை தொடர்ந்து பெய்துவந்ததால், முழு நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சவுத்தாம்டனில் அடுத்த 5 நாள்களுக்கு மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால, ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad