Header Ads

  • சற்று முன்

    ஒலிம்பிக் போட்டி- இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..


    ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. ரோமாபுரியைச் சேர்ந்த தியோடோஷயஸ் ஆட்சிக்கு வந்ததும், இந்த போட்டி தடைசெய்யப்பட்டது. இந்தப் போட்டியானது, 1894-ம் ஆண்டு ஜூன் 23-ந்தேதி நவீன வடிவம் பெற்று, ஒலிம்பிக் போட்டியாக மாறியது. இதனை ஒருங்கிணைத்தவர், பியரி டி கூபர்டின். இவரே ஒலிம்பிக் போட்டியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். முதன் முதலில் ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
    இதுவரை 31 ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நகரமாக லண்டன் விளங்குகிறது. 

    இந்நிலையில் 32-வது ஒலிம்பிக் போட்டி கடந்த 2020 ஆண்டு ஜப்பானில் நடைபெற்றிருக்க வேண்டியது. ஆனால் உலக அளவில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த விளையாட்டு போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஜப்பானின் டோக்கியோவில் அடுத்த மாதம் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதிவரை நடைபெற உள்ளன. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:


    ''பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய அனைவரையும் நான் பாராட்டுகிறேன். மற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான அவர்களின் பங்களிப்புகள் மற்றும் முயற்சிகள் குறித்து நமது தேசம் பெருமிதம் கொள்கிறது.

    டோக்கியோ 2021 ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இன்னும் சில வாரங்களில் தொடங்குகிறது. நமது விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad