Header Ads

  • சற்று முன்

    கொரோனா தடுப்பு - நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடியின் உரை...




    இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு..


    1. கொரோனா பெருந்தொற்றால் நமக்கு பிரியமான பலரை                          இழந்துள்ளோம். 

    2. கொரோனா 2ஆவது அலைக்கு எதிராக இந்தியா போராடி                          வருகிறது.

    3. நவீன உலகம், கொரோனா பெருந்தொற்று போன்றதொரு                          பேரிடரை கண்டதில்லை

    4. நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் கணிக்க முடியாத அளவிற்கு                  ஆக்சிஜன் தேவை அதிகரித்தது

    5. ரயில்கள், விமானங்கள், டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன்                                  கொண்டுவரப்பட்டு தேவை பூர்த்தி செய்யப்பட்டது

    6. ஆக்சிஜன் தேவையில் மக்களுக்கு உதவிட பாதுகாப்புப்                               படையினரையும் பயன்படுத்தினோம்

    7. கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளின்                                 உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டது

    8. மனித குலத்திற்கு கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய எதிரி         ஆகும்.

    9. கொரோனாவைத் தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி தான்.

    10. சில தடுப்பூசி நிறுவனங்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி                    உற்பத்தியில் உள்ளன.

    11. இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி பலரது            உயிரையும் காப்பாற்றியுள்ளது.

    12. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை எதிர்த்துப் போராட                          தடுப்பூசி தான் உதவியுள்ளது.

    13. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு போர்க்கால                            அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    14. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சுகாதார கட்டமைப்பை 1.5           ஆண்டுகளில் வலுப்படுத்தியுள்ளோம்.

    15. 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய துயரத்தை, கொரோனா                        பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது.

    16. இந்தியாவில் ஒரே ஆண்டில் 2 தடுப்பூசிகள் உற்பத்தி                                       செய்யப்பட்டு விநியோகம்.

    17. நாட்டில், இதுவரை 23 கோடி டோஸ்களுக்கு அதிகமாக                                  கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    18. கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பில், நமது இந்திய                                     விஞ்ஞானிகளை முழுமையாக நம்பினோம்

    19. தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு        அளித்து வருகின்றனர்.

    20. தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக மத்திய அரசு நிதி            அளித்துள்ளது.

    21. மூக்கு வழியாக செலுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி                    குறித்து ஆராய்ச்சி நடைபெறுகிறது.

    22. இந்தியாவில் மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு              கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரவிருக்கும்                        நாட்களில், கொரோனா தடுப்பூசி விநியோகம், பல மடங்கு                        அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    23. வெளிநாடுகளிலிருந்தும் தடுப்பூசிகளை பெற்று, மக்களுக்கு                    செலுத்த நடவடிக்கை எடுப்பது உறுதி.

    24. சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில்,                          பரிசோதனைகள் தொடங்கியுள்ளன.

    25. மொத்தம் 7 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி மருந்துகளை                தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

    26. மாநிலங்கள் ஊரடங்குகளை அமல்படுத்துவது தொடர்பாக                      மத்திய அரசு வழிகாட்டி வருகிறது.

    27. ஊரடங்கில் மாநிலங்கள் தளர்வளிக்கும்போதும், மத்திய அரசு                வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad