Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்... வானிலை ஆய்வு மையம் தகவல்...


    தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

    இதனிடையே மன்னார் வளைகுடா பகுதி, தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள்  மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால்  வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad