Header Ads

  • சற்று முன்

    மருத்துவ சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்...


    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது 'அண்ணாத்த' திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. விரைவில் ரஜினி டப்பிங் பணிகளையும் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது. மற்ற பணிகளையும் விரைவாக முடித்து அண்ணாத்த படத்தை வரும் தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கொரோனா அச்சுறுத்தல் காரணாமாக  சிறப்பு தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்லவதாக கூறுகின்றன. மேலும் அவரது குடும்பத்தினருடன் செல்லவதாகவும், அதாவது ரஜினியுடன் 14 பேர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுடன் பேசி நடிகர் ரஜினி, சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad