Header Ads

  • சற்று முன்

    நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் - சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டதால் நடவடிக்கை...


     

    தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய்.. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வளைத்து  வைத்திருக்கும் நடிகர் விஜய் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜய், புதிதாக 2012ல் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியிருக்கிறார்.

    இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த காருக்கு வரி வசூலிக்க தடை கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவரது கோரிக்கையை நிராகரித்து வழக்கை தள்ளுபடி செய்ததுடன், நடிகர்  விஜய்க்கு ரூ 1லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர். 


     

    மேலும், அபராதத் தொகை ரூ.1 லட்சத்தை, முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கும்படியும் நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டுள்ளனர். அதோடு, திரைப்படங்களில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்கள் போல் நடிப்பவர்கள், வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது எனவும் நிதிபதி கருத்து தெரிவித்துள்ளார். சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் எனவும், ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது..

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad