Header Ads

  • சற்று முன்

    தேனி மாவட்டம் - ஊஞ்சல் கயிறு இறுகி 10 வயது சிறுவன் பலி...


    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிபட்டியை சேர்ந்தவர் திரவிய ராஜ. இவரது மகன் கவியரசன் (10). இவர் அரசுப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த சிறுவன்,  நேற்று பந்துவார்பட்டி பகுதியில் தோட்டத்தில் உள்ள மரத்தில் நண்பர்களுடன் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது, எதிர்பாராத விதமாக கவியரசனின் கழுத்தில், ஊஞ்சல் கயிறு சிக்கி இறுக்கியது. இதில், அவருக்கு மூச்சி திணறல் ஏற்பட்டு மயங்கினார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக கவியரசனை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.


    இதுகுறித்து திரவியராஜா அளித்த தகவலின் பேரில் க.விலக்கு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊஞ்சல் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் முத்துச்சங்கிலிபட்டி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad