Header Ads

  • சற்று முன்

    பட்டினி - ஒவ்வொரு நிமிடமும் 11 பேர் உயிழப்பு....ஆக்ஸ்ஃபாம் நடத்திய ஆய்வில் தகவல்..


    உலகில் கொரோனாவால் கோடிக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. இதனால் வேலையிழப்பு ஏற்பட்டு பட்டினியை அதிகரித்துள்ளது. இதனிடையே, வறுமைக்கு எதிரான அமைப்பான ஆக்ஸ்ஃபாம் நடத்திய ஆய்வில், ஒவ்வொரு நிமிடமும் 11 பேர் பட்டினியால் உயிரிழக்கின்றனர் எனத் தெரியவந்துள்ளது.   இந்த அறிக்கைக்கு ஆக்ஸ்ஃபாம், 'பல்கிப் பெருகும் பட்டினி வைரஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஆக்ஸ்ஃபாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,


    பட்டினி வைரஸ் பல்கிப் பெருகி வருகிறது. இதனால் உலகின் பல இடங்களில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால், நிமிடத்துக்கு 11 பேர் இறக்கின்றனர். உணவுப் பஞ்சத்தால் மட்டும் உலக அளவில் நிமிடத்துக்கு 11 பேர் உயிரைவிடுகின்றனர். உலகம் முழுவதும் 155 மில்லியன் மக்கள் தற்போது உணவு பாதுகாப்பின்மை நிலவுகிறது. இது கடந்தாண்டை`விட 20 மில்லியன் அதிகமென்பது கவலையளிக்கும் விஷயம்.


    இது குறித்து, ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் அமெரிக்காவின் தலைவர் அபே மேக்ஸ்மேன் கூறும்போது "கொரோனா பெருந்தொற்று ஒரு பக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்க, இன்னொருபுறம் இதில் சில நாடுகள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளன.

    ஜூன் நடுப்பகுதியில் மட்டும் எத்தியோபியா, மடகாஸ்கர், தெற்கு சூடான், ஏமன் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் 521,814 பேர் பஞ்சத்தில் வாடுகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad