Header Ads

  • சற்று முன்

    மகாராஷ்டிராவில் கனமழை - 136 ஆக உயர்ந்துள்ளது பலி எண்ணிக்கை...

     


    மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக கனமழைபெய்து வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள கோல்ஹாப்பூர், ராய்காட், சங்கிலி, ரத்னகிரி, சாதாரா, சிந்துதுர்க், மும்பை மற்றும் தானே மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள. மேலும் மாகாத் அருகில் உள்ள தாலியே மலை கிராமத்தில் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் உத்தவ் தாக்ரே நேரில் பார்வையிட்டார்இந்த மலைகிராமத்தில்தான் நிலச்சரிவில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரோடு மண்ணில் புதைந்த சோகம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம், மழை தொடா்பான விபத்துகள், நிலச்சரிவு ஆகியவற்றால் கடந்த 3 நாள்களில் 136 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடா் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

     

    இதனிடையே மகாராஷ்டிரா மாநில மீட்பு மற்றும் மறுவாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் , "மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 1.34 லட்சம் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. மாடுகள், கோழிகள் உள்ளிட்ட 3221 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 53 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 99 பேர் காணாமல் போயிருக்கின்றனர்," என்று கூறப்பட்டுள்ளது.

     

    தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப்படையின் 149 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராய்காட், ரத்னகிரி, சாதாரா மாவட்டங்களில் காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர். ராணுவமும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளது. ஆபரேஷன் வர்ஷா என்ற பெயரில் ராணுவத்தின் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

     


    மேலும் பொதுமக்களுக்கு டேங்கர் லாரிகள் வாயிலாக குடிநீர் வழங்கும் பணியிலும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் . வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட மக்களுக்கு முதலுதவி சிகிச்சையுடன், மருந்துகளும் வழங்கப்படுகின்றன.

    மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று மாகாராஷ்டிரா மாநில அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசின் சார்பில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad