Header Ads

  • சற்று முன்

    ராஜஸ்தானில் ”செல்பி” எடுக்கும் போது மின்னல் தாக்கி 11 பேர் பலி...

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 12 ஆம் நூற்றாண்டு அமர் அரண்மனை அமைந்துள்ளது. கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டினுள் முடங்கிய நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் சுற்றுலாதலமான அங்கு மக்கள் பலரும் வருகின்றனர். வழக்கம் போல் நேற்றும் பல்வேறு மக்கள் சுற்றுலாவிற்கு வருகை தந்துள்ளனர். அப்போது அங்கு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது.

    இந்நிலையில் மழை காரணமாக 20 க்கும் மேற்பட்டோர் அரண்மனையிலுள்ள கண்காணிப்பு கோபுரத்தில் தங்கியுள்ளனர். அங்கு இருந்தவர்கள் இடி, மின்னலை பொருட்படுத்தாமல் செல்பி எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில்  11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றவர்கள் பயத்தில் கோபுரத்தில் இருந்து குதித்து பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

    ராஜஸ்தானையே உலுக்கிய இந்த சம்பவம் மின்னல் தாக்கி உயிரிழந்த  11 பேரின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். 



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad