Header Ads

  • சற்று முன்

    தேனி மாவட்டம் - செந்நாய் கடித்து 15 வெள்ளாடுகள் பலி...


    தேனி மாவட்டம் தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (37). கூலித்தொழிலாளியான இவர் 25 க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளஎத்து வந்துள்ளார். இவர் தினமும் மேய்ச்சலுக்காக அருகில் உள்ள மலைப்பகுதிக்கு ஆடுகளை அழைத்துச் செல்வது வழக்கம். 

    நேற்று மலைப்பகுதியில் வழக்கம் போல் வெள்ளாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் மதிய வேளை சாப்பிடுவதற்காக ஊருக்குள் வந்துள்ளார். அந்த சமயத்தில் மலைப்பகுதிகளுக்கு வந்த செந்நாய்கள் வெள்ளாடுகளை கடித்தன. அப்போது ஆடுகள் பயத்தில் ஆடுகள் மலைப்பகுதிக்கும் கிராமத்துக்கும்  ஓடியது. இதனை அறிந்த சிதம்பரம் கிராம மக்களை அழைத்து கொண்டு மலைப்பகுதிக்கு சென்றனர். செந்நாய் தாக்கியதில்  15 வெள்ளாடுகள்  பரிதாபமாக உயிரிழந்தனர். 

    தகவலறிந்த கண்டமனூர் வனச்சரக அதிகாரிகள், மயிலாடும்பாறை வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் கூறுகையில்,” செந்நாய் கடித்து 15 வெள்ளாடுகள் இறந்ததால், பாதிப்படைந்த சிதம்பரத்துக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என கோரிக்கை விடுத்துள்ளனர்.







    No comments

    Post Top Ad

    Post Bottom Ad