Header Ads

  • சற்று முன்

    பேஸ்புக் காதலனுடன் 15 வயது சிறுமி ஓட்டம் - பூச்சி மருந்து குடித்து தந்தை தற்கொலை...


    தெலுங்கானா மாநிலம் மாமுனூர் அருகே கவுடப்பள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. கடந்த மே மாதம் 7 ஆம் தேதி வீட்டிலிருந்த சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை தேட தொடங்கினர். எங்கு தேடியும் கிடக்காததால் 8 ஆம் தேதி போலீசில் புகார் அளித்தனர். இதனிடையே புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில் தனது மகள் காணாமல் போனதால் சிறுமியின் தந்தை மனமுடைந்து காணப்பட்டார். அதனால் விரக்தியில் கடந்த 16 ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மேலும் சிறுமியின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் தேட ஆரம்பித்தனர். சிறுமியின் பேஸ்புக் பக்கத்தையும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த பைடி ராஜசேகர் என்பவர் பேஸ்புக் மூலம் சிறுமியிடம் நட்பாக பேசி பின்பு காதலாக மாறியது தெரிய வந்தது. மேலும் ராஜசேகர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருப்பதிக்கு அழைத்து சென்றது தெரிய வந்தது. உடனே சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார் கடத்திச் சென்ற ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.





    No comments

    Post Top Ad

    Post Bottom Ad