Header Ads

  • சற்று முன்

    16 மாத குழந்தைக்கு நீரிழிவு நோய்... அதிர்ச்சி தரும் இரத்த சர்க்கரை அளவு....

     


    அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா சாக்ரமென்டோவைச்  சேர்ந்த கர்ட்னி மூர். இவரது கணவர் ஜேசன்.  இவர்களுக்கு 16 மாத மடோக்ஸ் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில், கர்ட்னி மூர் கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து தனது மகன் ஒவ்வொரு காலையிலும் ஈரமான டயப்பர்களை ஊறவைத்து எழுந்திருப்பதை கவனிக்கத் தொடங்குகிறார். எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும் அந்த 16 மாத குழந்தை, காலை நேரங்களில் அதிகளவு தாகத்துடன் இருப்பதை வழக்கமாக வைத்துள்ளான். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் இது தொடர்பாக இணையத்தில் தேடுகையில் சிறுவனிடம் இருந்த அறிகுறிகள் டைப் 1 நீரிழிவு நோயின் அறிகுறிகள் என்பதை தெரியப்படுத்தியுள்ளது.

     

    இதனையடுத்து, தனது மகனை பயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மருத்துவரிடம் இதனை பற்றி தெரியப்படுத்தியுள்ளார். மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துவிட்டு, உடனடியாக குழந்தையை அவசர சிகிச்சை அறைக்கு அழைத்து சென்றுள்ளன. பரிசோதனை முடிவில் குழந்தையின் சர்க்கரை அளவு கிட்டத்தட்ட 700 என்ற அளவில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

     


    பொதுவாக, குழந்தைகளுக்கு சாதாரண இரத்த சர்க்கரை அளவு 100 முதல் 180 வரை இருக்கும். ஆனால் இந்த குழந்தைக்கு 700 அளவில் இரத்த சர்க்கரை என்ற இரத்த குளுக்கோஸ் அளவு இருப்பதை கேட்டு தாயார் மூர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக சிறுவனுக்கு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 3 நாட்களுக்கு பின்னர் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 
    பிற தாயார்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரிவிப்பதற்காக அவர்கள் இது தொடர்பான தகவலை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும், எங்களது குழந்தைக்கு கிடைத்த அதிஷ்டம் பிற குழந்தைகளுக்கும் கிடைக்காது எனவும் அறிவுரை வழங்குகின்றனர்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad