Header Ads

  • சற்று முன்

    வெடி மருந்து அறையில் மின்னல் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு..7 பேர் படுகாயம்..


    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உள்ள காலாடிபட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, திடீரென அந்த  பகுதியில் இடி, மின்னலுடன்  மழை பெய்தது. இதனால், தொழிலாளர்கள் குவாரியில் வெடி மருந்து இருப்பு வைத்துள்ள கூரை வீட்டில் ஒதுங்கி நின்றனர்.

    அப்போது, எதிர்பாராத வகையில் அந்த வீட்டின் மீது மின்னல் பாய்ந்தது. இதில் அறையில் இருந்த வெடி மருந்துகள் வெடித்து சிதறியதில் வீடு தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து குவாரி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு விரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீரப்பட்டியை சேர்ந்த குமார் என்பரது மகன் விஜி(17), பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆண்டிசாமி, செல்வராஜ் உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad