Header Ads

  • சற்று முன்

    அதிர்ச்சி சம்பவம்...’ஜீன்ஸ்’ அணிந்ததால் 17 வயது சிறுமியை அடித்து கொன்ற உறவினர்கள்...

     


    உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் சேர்ந்தவர் அமர்நாத் பஸ்வான். இவருக்கு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்ததால் அங்கு சென்றுள்ளார்.  இவருடன் அவரது மனைவியும், 17 வயது மகளும் அங்கு சென்றனர். சிறிது நாட்கள் லூதியானாவில் தங்கியிருந்த அமர்நாத் பஸ்வானின் மனைவி மற்றும் மகளுடன்  மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது சிறுமி ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். இதற்கு அவரது தாத்தா, உறவினர் அரவிந்த் அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    'ஜீன்ஸ் பேண்டை அணியக் கூடாது. இந்திய உடைகளைதான் அணிய வேண்டும்' என, கூறினார்கள். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள்  சிறுமியை சுவற்றில் மோதியும், பலமாக தாக்கியும் கொலை செய்தனர்பின்னர் அவரது உடலை ஆட்டோவில் தூக்கி சென்று அங்குள்ள மேம்பாலத்துக்கு கீழே வீசியுள்ளனர்.போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி சிறுமியை கொன்ற அவரது தாத்தாவையும், உடலை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவரையும் கைது செய்துள்ளனர். சிறுமியை கொலை செய்த மற்ற உறவினர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad