Header Ads

  • சற்று முன்

    ஜப்பானில் நிலச்சரிவு...குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையும் காட்சி..19 பேர் மாயம்..


    ஜப்பானின் ஷிஜூவோகா பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 
    இந்த நிலச்சரிவால், அப்பகுதியில் இருந்த குடியிருப்புகள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்தது. குடியிருப்புகளில் வசித்து வந்த 19 பேரைக் காணவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், அப்பகுதியில் உள்ள அனைத்து மின் கம்பங்களும் சரிந்து விழுந்ததால் 200க்கும் அதிகமான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் 35,000க்கும் மேற்பட்ட மக்களை பாதுக்கான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளன. எனவே, மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவத்தின் உதவியை அப்பகுதி அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad