Header Ads

  • சற்று முன்

    19 வயது மகளை மரத்தில் கட்டித் தொங்கவிட்டு அடித்த தந்தை... பதறவைக்கும் வீடியோ...


    மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்புர் மாவட்டத்தில் உள்ளது, படே போல் தலோ என்ற கிராமம். 
     19 வயது பழங்குடியின பெண்ணுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.புகுந்த வீட்டில் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னை காரணமாக அங்கிருந்து வெளியேறினார். பிறந்த வீட்டிற்குச் சென்றால் திட்டுவார்கள் என்ற பயத்தில் உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

    இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அவர், தனது மகளை சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். கணவர் வீட்டில் இருந்து எப்படி வெளியேறலாம் என்று கூறி, சரமாரியாகத் தாக்கியுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணின் சகோதரர்களும் இணைந்து மரத்தில் கட்டித் தொங்கவிட்டு சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். 


    இந்த வீடியோ பற்றி போலீசாருக்கு தகவல் தெரிந்ததும் விசாரணையில் இறங்கினர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், 4 பேரை கைது செய்துள்ளனர்.

    பெற்ற மகளை தந்தையே மரத்தில் தொங்கவிட்டு அடித்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad