Header Ads

  • சற்று முன்

    +2 தேர்வு முடிவுகள் ஜூலை 19ம் தேதி வெளியீடு..

     


    ஜூலை 19 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2020-2021 கல்வியாண்டில் +2 பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. மேலும் 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் +2 செய்முறை தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் எனவும் அறிவித்தது. மதிப்பெண் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய கமிட்டி ஒன்றும்  அமைக்கப்பட்டது. 

    அதன்படி, மாவட்ட வாரியாக மாணவர்களுக்கான மதிப்பெண் நிர்ணய பணிகள்  முடிந்து ள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து  மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்படுகிறது என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை( எப்படி கணக்கிட வேண்டும் என்கிற விபரம்) முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, அரசாணை பிறபித்து தெளிவுபடுத்தியிருந்தார். 

    இந்த அரசாணையானது, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில், ஜூலை 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு தேர்வுகள் முடிவுகள் வெளியாகும் எனவும், பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in , www.dge2.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும் ஜூலை 21 ஆம் தேதி முதல் மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை, www.dge.tn.gov.in மற்றும் www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம்(டவுன்லோடு) செய்துகொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad