Header Ads

  • சற்று முன்

    2 வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்கள்- சம்பவ இடத்திலே பலியான குழந்தை....


    கர்நாடக மாநிலம் நவலூர் ரெயில் நிலையம் அருகே விவசாய கூலி வேலையில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள்,குடிசை அமைத்து தங்கி உள்ளனர். அங்கு ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் பகுதியை சேர்ந்த கோபால் மற்றும் அவரின் மனைவி சின்னம்மா. அவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தது

    இரண்டு நாட்களுக்கு முன் வேலைக்கு செல்வதற்காக தன்னுடைய 2 வயது குழந்தையை குடிசையில் படுக்க வைத்து விட்டு சென்றுள்ளன. அப்போது தெருநாய்கள் நவலூர் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்ட குடிசை பகுதியில் சுற்றித்திரிந்துள்ளன. அந்த சமயத்தில், கோபால்-சின்னம்மா வசித்து வந்த குடிசை திறந்து கிடந்தது. அப்போது அந்த தெருநாய்கள் அவர்களின் குடிசைக்குள் புகுந்தன. அவை, குடிசைக்குள் படுத்திருந்த 2 வயது ஆண் குழந்தையை கடித்து குதறி உள்ளன. இதில், அந்த குழந்தை பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

    இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் நிலத்தில் வேலை பார்த்த குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உடன் வேலை பார்த்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு குடிசையை நோக்கி ஓடி வந்தனர். அப்போது குழந்தையை நாய்கள் கடித்து குதறுவதை பார்த்து கோபால்-சின்னம்மா அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் தெருநாய்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். அதன் பின்னர் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்து இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad