Header Ads

  • சற்று முன்

    சேலத்தில் பெண்களுக்கான இலவச பயணசீட்டை 26 வடமாநில ஆண்களுக்கு வழங்கிய நடத்துனர் பணியிடை நீக்கம்....



    நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக
    தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல் நாளில் கையெழுத்திட்டார். இது அடுத்த நாள் முதலே அமலுக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தில் பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு இலவச பயண சீட்டு வழங்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. பேருந்தில் இலவசமாக பயணிக்கும் நான்கு கலர்களில் புதிய பயண சீட்டுகளை போக்குவரத்து கழகம் அச்சிட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு சிவப்பு நிறத்திலும், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்களுக்கு நீல நிறத்திலும், மூன்றாம் பாலினத்தவருக்கு பிங்க் நிறத்திலும், பெண்களுக்கு ப்ரவுன் நிறத்திலும் இலவச டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.

    இந்நிலையில் சேலம் ரயில் நிலையத்திலிருந்து சேலம் பழைய பேருந்து நிலையம் செல்லும் அரசு பேருந்தில் வடமாநிலத்தை சேர்ந்த 26 பேர் ஏறியுள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை கொடுத்து கட்டணம் வசூலித்தார் அந்த அரசு பேருந்தின் நடத்துனர் நவீன் குமார்அரசு பேருந்து ஐந்து ரோடு அருகே வந்த போது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்

    அப்போது வடமாநில ஆண்களிடம் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மற்ற பயணிகளை பேருந்தில் இருந்து இறங்கி மாற்று பேருந்து மூலம் அனுப்பிவைத்த அதிகாரிகள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட வடமாநிலத்தவர் மற்றும் அரசு பேருந்து நடத்துனர் நவீன் குமார் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை ஆண்களுக்கு  கொடுத்து முறைகேடாக கட்டணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அரசு பேருந்து நடத்துனர் நவீன்குமாரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad