Header Ads

  • சற்று முன்

    மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 % உயர்வு....


    கொரோனா பரவலை தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 3 தவணைகளுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின் மத்திய அமைச்சரவை நேரடியாக பிரதமர் மோடி இல்லத்தில் இன்று காலை கூடியது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்

    அண்மையில் புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அதில் ஏராளமான அமைச்சர்கள் புதியவர்கள் என்பதால் நேரடியாக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இந்தக்கூட்டத்தில் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 % இருந்து 28 % ஆக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளதுஇதனை ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளதுஓய்வூதியதாரர்களுக்கும் ஜூலை முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad