Header Ads

  • சற்று முன்

    கூடலூர் அருகே புலி தாக்கியதில் 2 மாடுகள் உயிரிழப்பு...


    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கடந்த 19ம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட முதுகுழி பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த முதியவரை புலி தாக்கி கொன்றது. இந்நிலையில் தற்போது தேவன் எஸ்டேட் பகுதியில் 2 மாடுகள் புலி தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அந்த புலிதான் மாடுகளையும் வேட்டையாடி இருக்குமோ என்ற அச்சம் அந்த பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து கூடலூர் ரேஞ்சர் கணேசன் கூறியதாவது: 

    தேவன் எஸ்டேட் பகுதியில் இரு மாடுகளை புலி தாக்கி கொன்றது. இந்த புலி தாக்கிய இடத்திற்கும், முதுமலை எல்லைக்கும் சுமார் 500 மீட்டர் தூரமே உள்ளது. இதனால், முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து புலி வந்திருக்க வாய்ப்புள்ளது. கடந்த 19ம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட முதுகுழி பகுதியில் புலி தாக்கி முதியவர் உயிரிழந்தார். அந்த இடத்திற்கும், மாடுகளை புலி தாக்கிய இடத்திற்கும் சம்பந்தம் இல்லை.

    னினும், மாடுகளை தாக்கி கொன்ற பகுதிகளில் 7 கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்து வருகிறோம். அப்பகுதியில் உள்ள மக்கள் தனியாக வனங்களுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad