Header Ads

  • சற்று முன்

    உலகிலேயே மிக சிறிய பசு... 3 நாட்களில் 15 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர் இந்த பசுவை..!!


    கொரோனா 2 வது அலை உலகமெங்கும் பரவிய நிலையில் பங்களாதேஷிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. ஊரடங்கு விதிக்கப்பட்டு பொது போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப் பட்டுள்ளது.

    இந்நிலையில், டாக்கா அருகில் உள்ள சாரிகிராம் என்ற பகுதியை 

    சேர்ந்த ஷிகோர் என்பவர் வேளாண் பண்ணை நடத்தி வருகிறார். அங்குள்ள பசு ஒன்று கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. அந்தக் கன்று குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளரவே இல்லை. ராணி என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பசு, 51 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 26 கிலோ எடையை கொண்டிருக்கிறது. 


    இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என்கிறார்கள் இந்த பசுவின் உரிமையாளர்கள். இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த மணிக்கியாம் என்ற பசு, உலகிலேயே சிறிய பசு என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் உயரம் 61 செ.மீ. ஆனால் இந்த  ராணி, அதை விட 10 செ.மீ குறைவு என்கிறார்கள். 


    ஷிகோர் ஆக்ரோ பார்ம் நிறுவனத்தின் மானேஜர் ஹசன் ஹவ்லேடர் என்பவர் அடிக்கடி அந்தப் பசுவை அளந்து பார்த்து வருகிறார். அவர் கூறும்போது, 'கொரோனா லாக்டவுன் இருந்தாலும் நீண்ட தூரத்தில் இருந்தெல்லாம் இந்தப் பசுவை பார்க்க வருகிறார்கள். பலர் இந்த கன்றுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர். கின்னஸ் சாதனைப் புத்தகத்துக்கு இந்த கன்று குறித்து தெரிவித்துள்ளோம். மூன்று மாதங்களில் அவர்கள் வந்து பார்ப்பதாகக் கூறியுள்ளனர். வெறும் 3 நாட்களில் மட்டும் 15 ஆயிரம் பேர் இந்த பசுவைப் பார்த்து சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad