Header Ads

  • சற்று முன்

    ஓடும் காரை மின்னல் தாக்கியது... அதிர்ஷ்டவசமாக 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிர் தப்பின..


    அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அப்போது ஒரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதன் காரணமாக கார் ஓடாமல் அப்படியே நின்றுள்ளது.
     அதிர்ஷ்டவசமாக அந்தக் கார் தீ பிடிக்கவில்லை. இதனால் அந்த காரில் பயணம் செய்த 5 பேரும் உயிர் தப்பினர். இந்த நிகழ்வை பின்னால் சென்ற காரில் இருந்து ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவை அவர் சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. 


    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி அந்த காரில் 3 வயது, ஒன்றரை வயது மற்றும் 8 மாத குழந்தைகள் உடன் ஒரு தம்பதி சென்று தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பியுள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்தின் போது அவர்களின் கார் செயல்படாமல் நின்றதால் அவர்கள் மிகவும் பதட்டமாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த வீடியோவை பதிவை பார்த்து பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad