Header Ads

  • சற்று முன்

    தென்காசி மாவட்டம் - குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு...


    தென்காசி மாவட்டம், ஆலங்குளம்  அருகே, சண்முகாபுரம் என்னும் சிறிய  கிராமம் உள்ளது. இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலும் விவசாய கூலி தொழிலாளர்கள் வசித்து வந்த இந்த கிராமத்தில் சில பீடித் தொழிலாளர்களும் உண்டு. அந்த கிராமத்தில் உள்ள தர்மராஜ் மகன் புவன் (5) தர்மராஜின் சகோதரர் கண்ணன் மகன் இஷாந்த்(5) மற்றும் அவரது உறவினர் பூபாலன் மகள் சண்முகப்பிரியா(5) ஆகிய மூன்று குழந்தைகளும் மதிய நேரத்தில் காணவில்லை என்று அவர்களின் பெற்றோர்கள் தேடியுள்ளனர்.

    அக்கம்பக்கம் தேடியும் குழந்தைகள் கிடைக்காததால் சந்தேகத்தின் பேரில் ஊருக்கு வடக்கு புறம் உள்ள குளத்தில் தேடிய போது குழந்தைகளின் ஆடைகள் தெரிந்துள்ளது. குளத்தில் இறங்கி பார்த்த போது மூன்று குழந்தைகளும் நீரில் மூழ்கி இருந்தன.  உறவினர்கள் குழந்தைகளை மீட்டு உடனடியாக ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவித்தனர். 


    விளையாடச் சென்ற குழந்தைகள் தண்ணீரைக் கண்டதும் பள்ளம் இருப்பது தெரியாமல் ஒருவர் பின் ஒருவராக இறங்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கக்கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு வந்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். இது தொடர்பாக ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad