Header Ads

  • சற்று முன்

    தலையில் தக்காளி வைத்து கொண்டு 31 நிமிடம் யோகா செய்து உலக சாதனை படைத்த மாணவி...

     


    சேலம் மாவட்டம் ஆத்தூர் தேவியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்இவரது மனைவி சுதா. இவர்களது மகள் தர்ஷிகா (10) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவயதிலிருந்தே யோகா மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் ஊரடங்கு காலத்தில் பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்த மாணவி தர்ஷிகா தொடர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்

    கொரோனாவின் 3 வது அலை குழந்தைகளைத் தாக்கும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதிலிருந்து குழந்தைகள் சிறுவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள யோகா அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணம் அந்த சிறுமிக்கு வந்துள்ளது

    மாணவி தர்ஷிகா பத்மாசன யோகாசனம் செய்து உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தலையில் தக்காளி பழத்தை வைத்து பத்மாசனம் யோகாசனத்தை 31 நிமிடம் அசையாமல், ஒரே இடத்தில் அமர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

    மாணவியின் இந்த சாதனையை சேலம் மாநகர காவல்துறையில் துணை ஆணையாளர் வேதரத்தினம் பாராட்டினார். பின்னர் மாணவியின் இந்த சாதனையை பதஞ்சலி புக் ஆஃ வேர்ல்டு ரெக்கார்டுஸ் அமைப்பு அங்கீகரித்து உலக சாதனைக்கான கேடயம் மற்றும் சான்றிதழை, திருச்சியை சேர்ந்த பதஞ்சலி குரு கிருஷ்ணகுமார் வழங்கி பாராட்டினார்.

     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad