Header Ads

  • சற்று முன்

    சென்னை- அண்ணா சாலையில் தீ விபத்து...40 பேர் பத்திரமாக மீட்பு...

     



    சென்னை அண்ணா சாலையில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் 3வது மாடியில் தேவராஜ் கம்பியூட்டர்ஸ் என்னும் கணினி விற்பனையகம் ஒன்று இயங்கி வருகிறது. இன்று காலை இந்த கடையின் ஜன்னல் வழியாக புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் 6 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்கும் பணியை மேற்கொண்டனர்.

    முதற்கட்டமாக கட்டிடத்தின் 2வது மற்றும் 4வது மாடியில் சிக்கி இருந்த 40 பேரை ராட்சத கிரேன் மூலமாக பத்திரமாக தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர்
    பின்னர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். தீயணைப்பு துறையின் 6 வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸுகள் வந்ததால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கணினி விற்பனையகத்தில் ஏற்பட்ட மின் கசிவு தான் தீ விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.  இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad