Header Ads

  • சற்று முன்

    நடுக்கடலில் படகு மூழ்கி பெண்கள் சிறுவர்கள் உட்பட 43 பேர் பலி..


    துனிசியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள லிபியாவின் சுவாரா நகரில் இருந்து பெண்கள், சிறுவர்கள் உட்பட சுமார் 130 அகதிகள் படகு ஒன்றில் ஐரோப்பா நோக்கி புறப்பட்டனர்.இந்நிலையில் ஆப்பிரிக்காவுக்கு மிக நெருக்கத்தில் உள்ள இத்தாலியின் லம்பேடெசா என்ற தீவுக்கு செல்ல வேண்டும் என்பது அவர்களின் இலக்குடன் சென்றுள்ளன. ஆனால் துனிசியாவின் ஹார்சேஸ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்த போது இந்த படகு சற்றும் எதிர்பாராத வகையில் கடலில் கவிழ்ந்தது.

    இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அப்போது அங்கு படகுகளில் மீன்படித்துக் கொண்டிருந்த மீனவர்கள், துரிதமாக மீட்பு பணியில் இறங்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த துனிசியா கடலோர காவல்படையுடன் இணைந்து நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 96 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும் அதற்குள் பெண்கள், சிறுவர்கள் உட்பட 43 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad