Header Ads

  • சற்று முன்

    மகாராஷ்டிரா மாநிலம் - நிலச்சரிவில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு...

     


    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ராய்கட் மாவட்டத்தில் உள்ள தலாய் மற்றும் மலாய் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேரை தேடும் பணியும் தீவிரமாக நடைபெறுகின்றதுமேலும், மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 8 உயிரிழந்துள்ளதாகவும் 2 பேரை தேடும் பணி தீவிரமாகவும் நடைபெற்று வருகிறது.

    இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே, ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்கள் கூரைக்கு அல்லது உயரமான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் மீட்புக் குழுக்கள் மக்களை கண்டுபிடித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மங்கேயோன் பகுதியில் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்ய தயாராக உள்ளன. எம்ஐடிசி யின் தீயணைப்பு படையும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

     கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதீத கனமழை பெய்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad