Header Ads

  • சற்று முன்

    கோவில் குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகள் உட்பட 5 பெண்கள் உயிரிழப்பு ....




    திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டியில் உள்ள சீதம்மாள் தெருவில் வசிப்பவர்கள் சுமதி(35) , அஸ்விதா (15), ஜீவிதா (14), நர்மதா(11), ஜோதிலட்சுமி (30). அருகருகே வசிக்கும் இவர்கள் 5 பேரும் கோவில் குளத்திற்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது சிறுமிகள் அஸ்விதா, ஜீவிதா, நர்மதா ஆகிய 3 பேரும் குளத்தில் இறங்கி விளையாடியுள்ளனர். எதிர்ப்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற இவர்கள் நீரில் முழ்கி தத்தளித்துள்ளனர்.

    எனவே அவர்களை காப்பாற்றுவதற்காக ஜோதிலட்சுமியும், சுமதியும் சென்றுள்ளனர். சேற்றில் சிக்கிக்கொண்ட அவர்கள் மேலே வர முடியாமல் நீரில் மூழ்கி 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் காவல் மற்றும் தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் அரை மணிநேர தேடுதலுக்குப் பின் 5 பேரின் உடல்களையும் மீட்டனர். 


     

    அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உள்பட 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..

     

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad