Header Ads

  • சற்று முன்

    ஈராக் - ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து 54 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு...


    ஈராக் நாட்டின் தெற்கு மாகாணத்தில் உள்ள தி குவாரல் நசிரியா என்ற பகுதியில் இமாம் ஹுசைன் என்ற மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை  அளிக்க தனி வார்டு  அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் இருந்த ஆக்சிஜன் தொட்டி ஒன்று திடீரென வெடித்தது. இதனை அறிந்த தீயணைப்பு குழு மருத்துவமனைக்கு விரைந்து வந்து தீயை அணைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில் சிக்கிய கொரோனா நோயாளிகளில் 54 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி 67 பேர் படுகாயமடைந்துள்ளதாக  ஈராக் நாட்டின் சுகாதார துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும்  மருத்துவமனை கட்டிடத்தில் கொரோனா நோயாளிகள் சிலர் இன்னும் சிக்கியுள்ளனர் என கூறப்படுகிறது.  அவர்களை மீட்கும் பணிகளும் நடந்து வருகின்றன.  இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு காரணமான மருத்துவமனை முதல்வரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad