Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்....

     


    தமிழகத்தில் தெற்கு கடலோர ஆந்திர மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தேனி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தருமபுரி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, ராணிப்பேட்டை , கள்ளக்குறிச்சி மற்றும் கோவையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
    இதர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால் இன்று முதல் வருகின்ற 21ஆம் தேதி வரை தெற்கு வங்க கடல் ,மத்திய வங்கக் கடல், கேரளா, லட்சத் தீவு பகுதி ,கர்நாடக கடலோரப் பகுதி, தென்மேற்கு அரபிக்கடல் ,மத்திய மேற்கு அரபிக்கடல் ,வடக்கு அரபிக்கடல் ஆகிய இடங்களில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள்  மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad