Header Ads

  • சற்று முன்

    மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு....



    மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் பிஜாவர் பகுதியை சேர்ந்தவர் லக்‌ஷ்மண் அஹிர்வார். அவர் தனது வீட்டின் மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது தொட்டிக்குள் போதுமான வெளிச்சம் இல்லாததால் மின்சார விளக்கை பிடித்துக்கொண்டே அதன் வெளிச்சத்தில் சுத்தம் செய்தார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியது. அவரது சத்தம் கேட்டு வீட்டிலிருந்து ஓடிவந்த ஒருவர் காப்பாற்ற் முயற்சி செய்யும் போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இப்படியே ஒருவர் பின் ஒருவராக குடும்பத்தில் இருந்த 6 பேரும் ஓடி வந்து பிடித்துக்கொண்டனர். இந்நிலையில் கடைசியாக மின்சாரம் தாக்கியதில் 6 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad