Header Ads

  • சற்று முன்

    வீட்டிற்கு வெளியே ”மதபோதகர் போர்டு” உள்ளே விபச்சாரம்..!! தாய் மகள் உட்பட 7 பேர் கைது...


    கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.டி.மாங்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் “மதபோதகர் லால் சைன்சிங்” என்ற போர்டு தொங்க விடப்பட்டிருக்கிறது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டிற்கும் மதபோதனை நடைபெற்று வருவதாக நினைத்திருந்தனர். அந்த வீட்டுக்குள் ஆண்களும் பெண்களும் அடிக்கடி வருவதும் போவதுமாக இருந்ததைப் பார்த்த அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் விபச்சாரம் நடப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால் அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் சோதனை நடத்தினர். அப்போது 4 பெண்கள், 3 ஆண்கள் என 7 பேர் சிக்கினர். அந்த பெண்களில் 2 பேர் தாயும் மகளும் என்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.  இது குறித்து 7 பேரையும் கைது செய்து   போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. வீட்டிற்கு வெளியே மதபோதகர் போர்டு உள்ளே விபச்சாரம் நடந்திருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.








    No comments

    Post Top Ad

    Post Bottom Ad