Header Ads

  • சற்று முன்

    70 நாட்களுக்குப் பிறகு புதுவைக்கு பேருந்துகள் இயக்கம்....

     

     



    கொரோனா தொற்று  பரவல் காரணமாக தமிழகத்திலிருந்து , புதுச்சேரிக்கு இயக்கப்படும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தாலும், பேருந்துகள் இயக்கப்படாததாலும் கடந்த 70 நாட்களாக, சுக துக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள  மக்கள் புதுவைக்கு செல்ல முடியாமல்  அவதிப்பட்டு வந்தனர். 

    இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாக தமிழக அரசு  படிப்படியாக தளார்வுகளை அறிவித்து வருகிறது. அதன் படி இன்று முதல் புதுவைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

    இதனைத்தொடர்ந்து, சென்னை கடலூர், வேலூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.   கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புதுவை வழியாக சென்னை செல்லக்கூடிய பேருந்துகளில்,  புதுவைக்கு செல்லக் கூடிய ஏராளமான மக்கள் முக்கவசம் அணிந்து  பயணித்தனர். 

                                                                                                                                              file image
     

     

     வேலூரில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 3 அரசுப் பேருந்துகள், பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு பேருந்தும் இயக்கடுகிறது. மேலும் திருப்பத்தூரிலிருந்து 1 பேருந்தும் ஏற்கெனவே உள்ள நேரப்படி அந்தந்த பேருந்து நிலையங்களிலிருந்து  இயக்கப்படும் என  போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 70 நாட்களுக்குப் பிறகு புதுவைக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad