Header Ads

  • சற்று முன்

    கேஸ் சிலிண்டர் வெடித்து தூங்கிக்கொண்டிருந்த 9 பேர் உயிரிழப்பு....


    குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே தொழிற்சாலை ஒன்று உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டதை சேர்ந்தவர்கள்.  இங்கு பணி புரியும் தொழிலாளர்களும் குடும்பத்தினரும் என மொத்தம்  10 பேர் ஒரு சிறிய அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது சமையல் சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டதை  அவர்கள் கவனிக்கவில்லை. 

    இந்நிலையில் கேஸ் கசிவு அறை முழுவதும் ஏற்பட்டு பக்கத்து வீட்டிற்கும் வாசனை வந்துள்ளது. அப்போது வாசனை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர் பக்கத்து வீட்டிலிருந்து தான் வாசனை வருவதை தெரிந்துகொண்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுவதற்காக கதவை தட்டினார். கதவு தட்டும் சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர், அறையின் மின் விளக்கை போட்டார். அப்போது அறை முழுவதும் தீ பரவியதில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.


    இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் 9 பேர் சிகிச்சை பலனின்றி பரதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கும்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றன. 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad