Header Ads

  • சற்று முன்

    அதிர்ச்சி தகவல்..!! அமெரிக்காவில் போதைப்பழக்கத்தால் இதுவரை 93,331 பேர் பலி....

     


    உலகம் முழுவதும் போதை பொருள் நுகர்வு என்பது ஆபத்தான மற்றும் அச்சுறுத்தலான ஒன்றாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

     

    இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் அமெரிக்காவில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வந்துள்ளது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் போதைப் பொருள் பயன்பாடு 30% அதிகரித்துள்ளது. போதை மருந்துகள், போதை ஊசிகள் போன்ற சட்டவிரோத போதைப் பொருள் பயன்பாடுகள் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் 93 ஆயிரத்து 331 பேர் பலியானதாக அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

     

    இது கடந்த 2019ஆம் ஆண்டில் 72,151ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. போதைப் பொருள் பயன்பாடு காரணமாக வெர்மோண்டில் 57 %, கென்டக்கி பகுதியில் 54 %, தெர்கு கரோலினாவில் 52 %, கலிப்போர்னியாவில் 46 % ஆக பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad