Header Ads

  • சற்று முன்

    ”பாராட்டலைன்னா பரவாயில்லை, குறை சொல்லாதீங்க” - நடிகர் விஜய்க்கு ஆதரவாக ஓபிஎஸ் மகன் அறிக்கை...

     


    நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்திருப்பது தான், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஆம்,  நடிகர் விஜய், புதிதாக 2012 ஆம் ஆண்டு  ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்.  இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த காருக்கு வரி வசூலிக்க தடை கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவரது கோரிக்கையை நிராகரித்து வழக்கை தள்ளுபடி செய்ததுடன், நடிகர்  விஜய்க்கு ரூ 1லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர். 

    சினிமாவில் ஹீரோக்களாக இருக்கும் நடிகர்கள், நிஜ வாழ்வில் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோவாக இருக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தது.. இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்கள் #வரிகட்டுங்க_விஜய் என்ற  ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கினர். இதேபோல் விஜய் ரசிகர்கள் #wesupportthalapathyvijay என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கினர். 

    இப்படி மாறி மாறி அனைவரும் கருத்து மோதலில் ஈடுபட்டிருக்க, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ன் மகன் ஜெயபிரதீப் விஜய்க்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், 

    உழைப்பால் உயர்ந்தவர்கள் அனைவரும் மனதார பாராட்ட வேண்டும்..
     

                        நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கூறியதற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூபாய்.1 லட்சம் அபராதம் விதித்து இருப்பது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. சினிமா துறையில் தனது சொந்த உழைப்பால் உயர்ந்து தான் வாங்கும் ஊதியத்திற்கு முறையாக வருமான வரியாக கோடிக்கணக்கான பணத்தை அரசுக்கு செலுத்தி வருபவர் நடிகர் விஜய். அந்தப் பணம் பல ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிகரமாக இருந்துள்ளது. எப்போதும் ஒரு மனிதரின் நிறைகளை குறைவாக பேசுவதும் சிறு சிறு குறைகளை மிகைப்படுத்திப் பேசுவது மனித இயல்பாக இருக்கிறது.

     மேலும் இறக்குமதி செய்த வாகனங்களுக்கு வரிவிலக்கு கேட்பது அவரவரின் உரிமை சார்ந்தது. இந்த உரிமை நடிகர் விஜய் அவர்களுக்கு உண்டு. சினிமா பிரபலம் என்றால் அவருக்கு பொருந்தாது என்றாகாது. இதேபோல் 2012ல் வரி விலக்கு கேட்டு சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரும் கோரிக்கை வைத்தார்கள். இதில் சச்சினுக்கு சட்ட திருத்தம் கொண்டுவந்து, மத்திய அரசு ரூ. 1.13 கோடி வரிவிலக்கு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

     எனவே சரிவர புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் எந்த மனிதராக இருந்தாலும் பல கஷ்டங்களையும், விருப்பு வெறுப்புகளையும் அவமானங்களையும் தாண்டிதான் உயர்நிலைக்கு வரமுடியும். அப்பேர்பட்டவர்களை பாராட்ட மனம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை, குறைகள் கூறுவதை தவிர்க்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். 



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad