Header Ads

  • சற்று முன்

    சூர்யா- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் “வாடிவாசல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு..

     


     ’அசுரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் புதிய படம் பற்றிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி, ‘விடுதலை’,  ’வாடிவாசல்’ ஆகிய இரண்டு படங்களை அவர் இயக்கி வருகிறார். சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘விடுதலை’ படத்தின்ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 



     இந்நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’வாடிவாசல்’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும், இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்  இசையமைக்கிறார். சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ என்ற நாவலைத் தழுவி இந்தப் படம் உருவாகி வருகிறது. கதைக்களம் தெரிந்தது என்றாலும் வெற்றிமாறனின் இயக்கத்தின், காட்சிகள் மற்றும் கதாப்பாத்திரங்களின் தேர்வும் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாவலில் முதியவரின் கதாப்பாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 


     

    இந்நிலையில் நாளை (ஜூலை 16)  ‘வாடிவாசல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா- வெற்றிமாறன்  இணையும் முதல் படம் என்பதால், ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad