Header Ads

  • சற்று முன்

    சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் அல்லு அர்ஜுனின் மகள்...

     


     டோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அல்லு அர்ஜுன். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அல்லு அர்ஜுன் . சிறந்த நடன கலைஞரும் கூட. சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர் என்றே சொல்லலாம்.. ஆம் இவருடைய தாத்தா அல்லு ராமலிங்கையா, பழம் பெரும் நடிகர்.. இவருடைய அப்பா அல்லு அரவிந்த், தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருகிறார். 


     

    அல்லு அர்ஜுனின் சகோதரர், அல்லு சிரிஷும் டோலிவுட்டில் முன்னணி நடிகர். இப்படிப்பட்ட சினிமா குடும்பத்திலிருந்து 4 ஆவது தலைமுறையான, அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹாவும் சினிமாவில் கால் பதிக்க இருக்கிறார். தெலுங்கில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இயக்குநர் குணசேகரின், அடுத்த படத்தில் அர்ஹா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். 

    காளிதாசர் எழுதிய புராணத்தில் இடம்பெற்றுள்ள ’ஷகுந்தலம்’ என்றும் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து, புராண திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். அந்தப்படத்தில் ஷகுந்தலை கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகை சமந்தாவும், ஹீரோவாக மலையாள நடிகர் தேவ் மோகனும் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 


     

    இதில் குழந்தை நட்சத்திரமாக அர்ஹா நடிக்க இருப்பதை, அவரது தந்தை அல்லு அர்ஜுன் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார். அதில்,"எனது குடும்பத்தின் நான்காவது தலைமுறையும் தற்போது நடிக்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது .இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு எனது நன்றி. மிக அழகாக அர்ஹா இந்த படத்தில் அறிமுகமாக உள்ளார் " என குறிப்பிட்டுள்ளார்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad